fbpx

இந்த 5 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை..!! உங்க ஊரும் இருக்கா..?

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஈரோடு மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் (நவ.8, 9) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரூ.1,000 உரிமைத்தொகைக்கு மேல்முறையீடு செய்துள்ளீர்களா..? இன்று முதல் தொடக்கம்..!! செக் பண்ணுங்க..!!

Tue Nov 7 , 2023
மகளிர் உரிமைத்தொகை கோரி மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களின் வங்கிக் கணக்கில் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்படுகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத் […]

You May Like