ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் மழை காரணமாக தக்காளில் சாகுபடி குறைந்த நிலையில் தமிழக சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் தக்காளி விலை வேகமாக அதிகரித்து வருகிறது. கூடவே சமீபமாக வெங்காயம் விலையும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சமையலுக்கு இந்த இரண்டு காய்கறிகள் தான் மிகவும் அடிப்படை தேவையாக உள்ளது. எனவே தக்காளி விலை உயர்வால் வீடு மற்றும் ஓட்டல்களில் தக்காளி சட்னி உள்ளிட்ட அதனை சார்ந்த உணவு பொருட்கள் தயாரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்கறி சந்தைகளில் 3 முதல் 5 கிலோ வாங்கி செல்லப்பட்ட தக்காளி மற்றும் வெங்காயம் அரைக்கிலோ முதல் ஒரு கிலோ மட்டுமே வாங்கி செல்கின்றனர். பண்டிகை காலம் விளைச்சல் பாதிப்பால் காய்கறிகளின் வரத்து குறைவு போன்ற காரணங்களால் தமிழகத்தில் கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தக்காளி விலை, இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகிறது. தக்காளி விலை தற்போது குறைந்திருந்தாலும், வரும் நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மீண்டும் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி, வெங்காயம் விலை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி 49 ரூபாய்க்கும், வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
Read more ; நீங்களும் உயில் எழுதி வைக்கப் போறீங்களா..? அப்படினா கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!