fbpx

திடீர் அதிர்ச்சி…! பிரபல பாலிவுட் நடிகர் நுரையீரல் பாதிப்பால் காலமானார்…! சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…!

பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி நுரையீரல் செயலிழப்பு காரணமாக தனது 60 வயதில் காலமானார். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஒரு வருடமாக படுத்த படுக்கையாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று உடல்நிலை மோசமானதை அடுத்து ஜாவேத் கான் சாண்டாக்ரூஸில் உள்ள சூர்யா நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவிற்கு நடிகர் அகிலேந்திர மிஸ்ரா ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், “ஜாவேத் கானுக்கு பணிவான அஞ்சலி. சிறந்த நடிகர், மூத்த கலைஞர், இப்டாவின் தீவிர உறுப்பினராக இருந்தவர் என தெரிவித்துள்ளார். ஜாவேத் கான் அம்ரோஹி 2001 ஆம் ஆண்டு ‘லகான்’ திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஜீ இன்ஸ்டிடியூட் ஆஃப் மீடியா ஆர்ட்ஸில் நடிப்பு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

Vignesh

Next Post

3,800 பேரை பணியில் இருந்து நீக்க Ford நிறுவனம் திட்டம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..

Wed Feb 15 , 2023
ஃபோர்டு நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 3,800 பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது.. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. […]

You May Like