நடிகர் ரஜினிகாந்த் ‘விடுதலை’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரின் நடிப்பில் உருவான விடுதலை படம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. 2 பாகங்களாக உருவாகி உள்ள படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ‘விடுதலை’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” விடுதலை… இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு – பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..