மைனர் காதலியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
மும்பையில் இளைஞர் ஒருவர் மைனர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி காதலியை தனது அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அவருடன் வீட்டிற்கு தெரியாமல் உடலுறவு வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஏப்ரல் 29 அன்று தனது சகோதரியிடம் வாட்ஸ்அப்பில் தனக்கும், தனது காதலனுக்கும் இடையே நடந்த சம்பவம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்ததை அவரது குடும்பத்தினர் அறிந்த பிறகு இது வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஏப்ரல் 29, 2021 அன்று, ஐபிசி மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கூறி மும்பை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த இளைஞர். வழக்கு நீதிபதி பார்தி டாங்ரேவின் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண் தானாக முன்வந்து குற்றம் சாட்டப்பட்டவருடன் தனது அத்தையின் வீட்டிற்கு சென்றதாகவும். இந்த சம்பவம் கடந்த வருடம் நடந்தது என்றும், அப்போது காதலியின் வயது 15 என்று நீதிமன்றம் கூறியது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இருந்து, பாதிக்கப்பட்ட சிறுமி, அத்தை வீட்டுக்கு தானாக முன்வந்து சென்றதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் செயலை எதிர்க்கவில்லை, குற்றம் சாட்டப்பட்டவர் எந்த நேரத்தில் அவருடன் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்று நீதிமன்றம் கூறியது. குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.