fbpx

வெற்றியோ, தோல்வியோ எழுச்சியுடன் சம்பவம் செய்த காங்கிரஸ்..!! பாஜகவை திணற வைத்த தமிழர் சுனில்..!!

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எழுச்சியை சந்தித்து உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தியின் திட்டமிடல், பிரச்சாரம், தேர்தல் பணிகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த எழுச்சி இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இந்த எழுச்சிக்கு பின் தமிழர் ஒருவரும் முக்கிய காரணமாக இருந்தார். 52 இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 100 இடங்களுக்கு காங்கிரஸ் வர அந்த தமிழருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

2014, 2019 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு காங்கிரஸ் சரியாக திட்டமிடவில்லை, பெரிய முயற்சிகளை செய்யவில்லை, பாஜகவுக்கு டப் பைட் கொடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் அப்படி இல்லை. இரண்டு கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை முடித்து ராகுல் காந்தி மேற்கொண்ட பிரச்சாரம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. வேட்பாளர் தேர்வு தொடங்கி பிரச்சார யுக்தி, களப்பணி வரை எல்லாவற்றிலும் இந்த முறை காங்கிரஸ் டாப் நாட்ச் என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றியோ, தோல்வியோ இதுவரை இல்லாத எழுச்சியுடன் போட்டியிட்டது காங்கிரஸ்.

களத்தில் மேற்கொண்ட பிரச்சாரம், சமூக வலைதள பிரச்சாரம், முறையாக திட்டமிட்டு காய் நகர்த்தியது, பத்திரிகைகளில் முறையாக விளம்பரம் கொடுத்தது என்று காங்கிரஸ் பாஜகவை இந்த தேர்தலில் திக்கி திணற வைத்தது. வெற்றியோ தோல்வியோ காங்கிரஸ் சிறப்பாக சண்டை செய்தது. இதற்கெல்லாம் காரணம் அங்கே கட்சி தேர்தல் ஆலோசகராக நியமித்து இருந்த சுனில் கணகூலுதான் (Sunil Kanagolu) திட்டங்களை வகுத்த பலரில் இவரும் ஒரு காரணம்.

ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளை தெரிந்த சுனில் பிரபல அரசியல் ஆலோசகர் ஆவார். தமிழ் மற்றும் ஆந்திரா பூர்வீகத்தை கொண்டவர். அரசியல் ஆலோசகராக பல கட்சிகளுக்கு பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்ற சென்று அங்கு முழு நேர உறுப்பினர் ஆகிவிட்டார். பிரசாந்த் கிஷோர் போல் இல்லாமல் சுனிலை ஊடகங்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ பார்க்க முடியாது. காங்கிரஸின் 2024 தேர்தல் பணிக்குழுவின் முக்கிய மாஸ்டர்மைன்ட். மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 39 வயதான சுனில் மிகவும் வித்தியாசமானவர்.

பிரசாந்த் கிஷோரை போல இல்லாமல் இவர் மிகவும் அமைதியானவர், அரசியல் சார்பு அற்றவர். ஆனால், இந்த முறை காங்கிரஸ் உறுப்பினராகவே சேர்ந்து விட்டார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் இந்த முறை காங்கிரசுக்கு வெற்றியை தேடிக்கொடுத்த சுனில் ஏற்கனவே தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணிகளை செய்து அங்கேயும் வெற்றிக்கு காரணமானதால் லோக்சபா தேர்தலில் பணிகளை செய்ய ஒப்பந்தம் ஆனார். காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கூட இவரை பார்த்தது இல்லை.

காங்கிரஸ் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் பெரும் பகுதியை திட்டமிட்டது, ராகுல் என்ன செய்ய வேண்டும் என்று பிளான் செய்தது எல்லாமே சுனில்தான். தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று 2024 வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறார். பிரசாந்த் கிஷோர் போல இல்லாமல் சுனில் நேரடியாக அனைத்து பணிகளையும் செய்ய கூடியவர். கட்சி நிர்வாகிகளுக்கு நேரடியாக ஆலோசனைகளை வழங்க கூடியவர். 2014-க்கு முன்பு இவரும் பிரசாந்த் கிஷோரும் சேர்ந்து பணியாற்றி அதன்பின் பிரிந்துவிட்டனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு வேலை பார்த்துவிட்டு அதன்பின் காங்கிரசில் இணைந்தவர் தற்போது ராகுலின் லெப்ட் ஹேண்டாக இருக்கிறார். கர்நாடகாவில் காங்கிரசின் PayCM , ByeBYeBjp போன்ற பிரச்சாரங்களை இவர்தான் உருவாக்கியது. இவரின் தாயார் தெலுங்கு, அப்பா தமிழ் – கன்னடா. சரியாக சொல்ல வேண்டுமென்றால் திராவிடர்..! இவர் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில். அமெரிக்கா செல்லும் வரை பெரும்பாலும் சென்னையில் படித்தவர். இளங்கலை பட்டதாரியாக பொறியியல் படித்தார். அவர் 2 முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார் – நிதியில் எம்எஸ் மற்றும் எம்பிஏ படித்துள்ளார். 2009இல் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார் 2014 வரை பிரசாந்த் கிஷோருடன் பணியாற்றினார். இப்படிப்பட்ட சுனில் வகுத்த பிரச்சார யுக்திகள், பாரத் ஜோடா யாத்திரை திட்டங்கள்தான் காங்கிரசின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

Read More : BREAKING | கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சந்திரபாபு நாயுடு..!! யாருடன் தெரியுமா..?

English Summary

Win or lose the Lok Sabha elections, the Congress fought well. The reason for all this is Sunil Ganakool, who was appointed as the party’s election advisor there.

Chella

Next Post

நீங்கள் ஓட்டும் கார் திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையா? இதை செய்தால் போதும்!!

Wed Jun 5 , 2024
What if a car on the road suddenly fails to brake? A situation like this can happen to anyone at any time.

You May Like