நானும் ரவுடி தான் படம் எல்லாத்தையும் கொடுத்தது என விக்னேஷ் சிவன்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்
நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகளாகின.நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகியுள்ளனர்.
இந்நிலையில் ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்த படமாக வெளியான இந்த திரைப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து இருப்பார்.
இந்நிலையில், நானும் ரவுடிதான் வெளியாகி ஏழு வருடங்களான நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நயன்தாரா உள்பட நடிகர்களுக்கு காட்சி ஒன்றை விளக்கிக் கொண்டிருக்கின்றார் விக்னேஷ் சிவன்.
அவரது பதிவில் 7 ஆண்டுகள் சிறந்த அனுபவம் மற்றும் இன்பம் என இந்த படம் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. இதற்காக எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன் தனுஷ் சார், என்று அவர் கூறி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.