கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் எண்ணும் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தாங்கள் முழு பொறுப்பேற்பதாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனம் கூறி இருந்தது. இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த எல்லா குளறுபடிகளும் திட்டமிடப்பட்ட ஒன்று. அதற்கு பாஜகவை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர்தான் காரணம் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானை பழிவாங்கி அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இது நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.
மேலும் இதில், இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் இதில் தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மீது உள்ள தொழில் போட்டியால் அரசியல் பிரமுகர் உடன் சேர்ந்து இதனை அரங்கேற்றியதாகவும், அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் அந்த தனியார் யூடியூப் சேனல் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது அறிக்கையில். அதில், “என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மன வேதனையுடன், இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி, யூடியூப் சேனல் ஒன்றில், என்னையும் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானையும் தொடர்புபடுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார்.
அது முற்றிலும் பொய்யே, அந்த யூடியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.