fbpx

பெருமழையில் சிக்கிய விஜய்..!! விடிய விடிய காத்திருப்பு..!! பரபரப்புக்கு மத்தியில் வாக்களிக்க வருகை..!!

‘The Greatest of All Time’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும் நிலையில், இன்று தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சென்னை வந்தடைந்தார்.

லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் துபாயில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நடிகர் விஜய் வாக்களிக்க வர முடியாத சூழல் எழுந்த நிலையில், தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். படப்பிடிப்பிற்கு ரஷ்யா சென்ற அவர், சென்னைக்கு திரும்பும் வழியில் துபாயில் பெருமழை பெய்ததால், அங்கு சிக்கிக் கொண்டார். இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே தங்கியிருந்த அவர், ஒருவழியாக விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இன்னும் சற்று நேரத்தில் அவர் வாக்களிக்க உள்ளார்.

Read More : இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள சூப்பர் ஹிட் படங்கள்..!! இது செம த்ரில்லர் படம்..!!

Chella

Next Post

இண்டிகோ உணவில் இவ்வளவு உப்பா? - ஆய்வு சொல்வது என்ன?

Fri Apr 19 , 2024
இண்டிகோ விமானங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் உப்பின் அளவை மேகியுடன் ஒப்பிடும் வீடியோவை ரேவந்த் ஹிமத்சிங்க என்ற உணவுப் பொருட்கள் ஆய்வாளர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பிரபல உணவு பொருள் ஆய்வாளர் ரேவந்த் ஹிமத்சிங்க என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை ருசித்து அந்த உணவுப் பொருட்களை மதிப்பாய்வு செய்வதில் சிறப்பு பெயர் பெற்றவர்.  அந்த வகையில், அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்  Cadbury’s Bournvita இல் […]

You May Like