விஜய் உடனான சந்திப்பு குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எங்கள் வீட்டிற்கு விஜய் வந்த போது, விஜய பிரபாகரனை பார்த்து, ‘நீ தான் எனக்கு அரசியலில் சீனியர் வாழ்த்துகள்’ என்று கூறினார். கோட் திரைப்படத்தில் முறைப்படி விஜயகாந்த் அவர்களை Al தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக நேரில் வந்து நன்றி தெரிவித்தார்கள். விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவராக தான் வந்து சந்தித்தார். அரசியல் காரணமாக சந்திக்கவில்லை” என்றார்.
கோட் படத்தில் விஜயகாந்த் வரும் இடம் ரொம்பவே பிரம்மாண்டமாக வந்திருக்கும்மான்னு சொன்னார். நிச்சயம் இந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும்” என்று கூறினார். விஜய் மட்டுமின்றி GOAT படக்குழுவினர் அனைவரும் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை சந்தித்தனர். கோட் படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் தோன்றுவதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். மேலும், GOAT திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்க வருமாறு விஜய் எங்களை அழைத்தார்.
கட்சிக் கொடியை வெளியிட்ட விஜய்க்கு, பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். எங்க வீட்டுப்பிள்ளை விஜய். இனி ஒவ்வொரு அடியையும் விஜய் யோசித்து வைக்க வேண்டும். பல சர்ச்சைகள், சவால்களை சந்திக்க வேண்டியது தான் அரசியல். மேலும், தங்கள் வீட்டுக்கு விஜய் வருவது புதிதல்ல. மகன் விஜய பிரபாகரனுக்கு அவர் நல்ல நண்பர்” எனவும் தெரிவித்தார்.
Read More : மின்வாரியத்தில் வந்த அதிரடி மாற்றம்..!! இனி எல்லாமே செல்போனில் தான்..!! என்ன தெரியுமா..?