fbpx

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் சித்தார்த் மல்லையா!! திருமண கிளிக்ஸ் இதோ!

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த சித்தார்த்தா மல்லையா – ஜாஸ்மின் திருமணத்தின் முதல் காட்சி வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த சித்தார்த்தா. லண்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வளர்ந்தார். அவர் வெலிங்டன் கல்லூரி மற்றும் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்தார், பின்னர் ராயல் சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ஸ்பீச் அண்ட் டிராமாவில் நடிப்பு பயின்றார்..சித்தார்த் மல்லையா ஒரு நடிகரும் மாடலும் ஆவார். 

நாடகப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, சித்தார்த்தா ஒரு மாடலாகவும் நடிகராகவும் பணியாற்றத் தொடங்கினார். அவர் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமான பிரம்மன் நாமன் உட்பட பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். ஆன்லைன் வீடியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர், கின்னஸின் சந்தைப்படுத்தல் மேலாளராக பணியாற்றினார்.

அமெரிக்காவின் கல்ஃபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற Halloween 2023 விழாவில் சித்தார்த்தா – ஜாஸ்மின் நிச்சயதார்த்த விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விஜய் மல்லையா தனது காதலிக்கு தனித்துவமான முறையில் புரோபஸ் செய்தார்.. அவர்களின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மந்திரவாதி உடை அணிந்திருக்கும் ஜாஸ்மினுக்கு சித்தார்த்தா மண்டியிட்டு தனது காதலை சொல்வதையும், ஜாஸ்மின் தனது நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்…

விஜய் மல்லையாவின் மகனும், நடிகரும், மாடலுமான சித்தார்த்தா மல்லையா, தற்போது தனது காதலி ஜாஸ்மினுடன் திருமணம் செய்து கொண்டார். சித்தார்த்தா மல்லையாவுடனான தனது திருமண புகைப்படத்தை ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புதுமணத் தம்பதிகளின் முகங்கள் தெரியவில்லை என்றாலும், அவர்கள் கைகோர்த்திருப்பது படத்தில் இடம்பெற்றிருந்தது. ஜாஸ்மின் வெள்ளை நிற கவுனிலும், சித்தார்த்தா கருப்பு நிற டக்ஸிடோ உடையிலும் திருமண மோதிரத்தை அணிந்திருந்தனர்.

Read more ; ஹோட்டல் அறையில் பெண் போலீசுடன்  சிக்கிய மூத்த காவல்துறை அதிகாரி!! கான்ஸ்டபிளாக மாறிய DSP..!!

English Summary

Vijay Mallya’s son Siddharth Mallya got married this weekend. The actor-model married his girlfriend Jasmine in an intimate wedding ceremony.

Next Post

ஏரல் சாலை விபத்தில் 3 பெண்கள் பலி!! - 'ரூ.3 லட்சம் நிவாரணம் ' முதலமைச்சர் அறிவிப்பு!

Sun Jun 23 , 2024
Relief to the families of those who died in the Eral road accident - Chief Minister M.K.Stalin announcement

You May Like