விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் அதே பெயரில் ரீமேக்காகிறது. இப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அடுத்ததாக இயக்கியுள்ளப் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடியாததால் தள்ளிவைத்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.