fbpx

விஜய் சேதுபதி பேச விடாமல் அசிங்கப்படுத்துகிறார்.. ரொம்ப நோஸ்கட் பண்ணுறாரு..!! – தர்ஷா குப்தா குற்றச்சாட்டு

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 9 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் வார இறுதியில் ரவீந்தர் சந்திரசேகரும், இரண்டாவது வார இறுதியில் அர்னவ்வும் எலிமினேட் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து மூன்றாவது வார எலிமினேஷனில் தர்ஷா வெளியேற்றப்பட்டார்,.

முன்னதாக வெளியேற்றப்பட்ட அர்னவ், ஆண்கள் அணியை மேடை வரம்பை மீறி விமர்சித்து வெளியேறினார். அவரை விஜய் சேதுபதி கண்டித்து அனுப்பி வைத்தார். அதே போல தர்ஷா குப்தாவும், பெண்கள் அணியில் குழு போன்று ஆட்கள் சேர்ந்துகொண்டு பிறரை ஒதுக்குவதாகவும் தெரிவித்து இருந்தார். இவரின் பேச்சு அப்பட்டமாக அர்னவை போலவே இருந்ததாகவும், அர்னவ் கோபத்தில் கத்திவிட்டு சென்றாலும், இவர் வன்மத்தில் கக்கிவிட்டு செல்வதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. மக்கள் மத்தியில் இவ்வாறான விஷயங்கள் என்பது எதிர்மறை தோற்றத்தையே வழிவகை செய்யும் என்பதால், மேடை நாகரீகத்தை போட்டியாளர்கள் இழந்ததாக செய்திகள் பரவியது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு தர்ஷா குப்தா அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், விஜய் சேதுபதி யாரையுமே பேச விடுவதே இல்லை. ஏதாவது பேச எழுந்தாலுமே நோஸ்கட் செய்து உட்கார வைத்து விடுவார். தொடர்ந்து அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவரிடம் பேசவே பயமாகே இருக்கிறது என்றெல்லாம் கூறியிருந்தார். இப்படி
விஜய் சேதுபதி மீது வைத்த குற்றச்சாட்டுக்கு காரணம், தர்ஷா நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு பெண் போட்டியாளர்களை மோசமாக விமர்சித்து பேசி இருந்தார்.

உடனே அதற்கு விஜய் சேதுபதி கண்டித்திருந்தார். இதையெல்லாம் வைத்து தான் இவர் இப்படி கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விதம் குறித்து கலவையான விமர்சனங்களை காணமுடிகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளரே எதிர்மறை விஷயங்களை பகிர்ந்திருப்பது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Read more ; மத்திய அரசு ஊழியர்களின் கதவை தட்டும் குட் நியூஸ்.. 8வது ஊதியக்குழு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

English Summary

Vijay Sethupathi makes him ugly by not letting him talk.. Kamal sir would not do this..!! – Darsha Gupta Allegation

Next Post

தமிழ்நாடு முழுவதும் “முதல்வர் மருந்தகம்”..!! விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! வெளியான அறிவிப்பு..!!

Thu Nov 7 , 2024
It has been announced that those who are willing to set up Chief Minister's Dispensary all over Tamil Nadu can apply.

You May Like