fbpx

இதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு…..! மாணவர்கள் இடையே நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு…..!

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கின்றன இந்த தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் உடன் ஊக்கத் தொகையையும் வழங்கும் கல்வி விருது விழா சென்னை நீலாங்கரையில் ஆர்கே கன்வென்ஷன் மையத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் நடிகர் விஜய் தமிழகத்தில் முதல் மற்றும் 600 க்கு 600 என முழுமையான மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு ஊக்கத்தொகை சான்றிதழுடன் வைர நெக்லஸ் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார் இதன் பிறகு மற்ற மாணவர்களுக்கும் ஊக்கத் தொகையை வழங்கி வருகிறார் நடிகர் விஜய்.

முன்னதாக இந்த விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய் படிப்பை தவிர்த்து மாணவர்களிடம் நாம் கவனித்தால் அவர்களுடைய குணம் சிந்தனை திறன் மட்டுமே எஞ்சி இருக்கும் என தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். மேலும் பணத்தை இழக்கலாம், குணத்தை இழக்கக்கூடாது என்று தெரிவித்துள்ள அவர், பெற்றோர்களின் கண்காணிப்பில் இருந்து வெளியே செல்லும்போது கிடைக்கும் சுதந்திரத்தை சரியான முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களை பிறந்தால் பல்வேறு தவறான செய்திகள் உலா வரலாம். அதில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் தான் முடிவு செய்கிறேன் புத்தகங்களை கடந்து மாணவர்கள் அனைவரும் பல்வேறு விஷயங்களை படிக்க வேண்டும் பெரியார், அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாளைய வாக்காளர்கள் நீங்கள் தான் அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். ஆனாலும் நம்முடைய விரலை வைத்து நம்முடைய கண்ணை குத்துவது தான் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதுதான் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்கு செலுத்துவது என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் தங்களுடைய பெற்றோர்களிடம் காசு வாங்கிக்கொண்டு வாக்கு செலுத்தக் கூடாது என்று சொல்லுங்கள், முயற்சி செய்து பாருங்கள் நீங்கள் சொன்னால் நிச்சயமாக நடைபெறும் அடுத்து வரும் காலங்களில் நீங்கள் தான் வாக்காளர்கள் இது நடந்தால் மட்டுமே கல்வி முறை ஒரு முழுமை அடைந்ததாக உணர முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் உங்கள் அருகில் இருக்கின்ற தேர்வில் தோல்வியை சந்தித்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு நம்பிக்கை வழங்குங்கள் அதுவே நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

மாணவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தவறான முடிவை மேற்கொள்ளக் கூடாது உங்களால் இது முடியாது என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கலாம் ஆனாலும் அதனை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்று பேசியுள்ளார் நடிகர் விஜய்.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு….! எண்ணிக்கை 108 ஆக பதிவாகியுள்ளது…..!

Sat Jun 17 , 2023
கொரோனா நோய் தொற்று பாதிப்பு விவரங்கள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,49,93,390 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து, இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை […]

You May Like