fbpx

2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் விஜய்..? முதல்வர் வேட்பாளர் கூட அவர்தானாம்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். இதனால் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அவரது கட்சி களமிறங்கவில்லை.

தற்போது விஜய் திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவர் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். இதற்கிடையே தற்போது மாவட்டம், சட்டசபை தொகுதி வாரியாக நடிகர் விஜய் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். மேலும் பெண்கள், இளம் தலைமுறையினரின் வாக்குகளை கவரும் வகையில் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சட்டசபை தொகுதி வாரியாக பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி குடும்பத்துடன் போட்டோவும் எடுத்து கொண்டார்.

இந்நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜய்யின் தவெக கட்சி தீவிரமாக ஆலோசிப்பதாகவும், தேர்தலில் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பு நிலையை எடுப்பதென்று விஜய் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க சாத்தியக் கூறு உள்ளது எனவும், ஆனால் கூட்டணிக்கு விஜய்தான் முதல்வர் வேட்பாளர் எனவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More : இந்தியன் வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

English Summary

There is a possibility of forming an alliance with the AIADMK, but Vijay is the chief ministerial candidate for the alliance, sources say.

Chella

Next Post

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்..? மத்திய அரசு முக்கிய ஆலோசனை..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

Fri Jul 19 , 2024
It has been reported that the central government is considering the appointment of new governors for states like Tamil Nadu, Kerala and Telangana.

You May Like