பாடகி சுசித்ரா குற்றம்சாட்டிய அனைத்து நடிகர், நடிகைகளையும் உடல் பரிசோதனை செய்ய வேண்டுமென தமிழக முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரையுலகில் அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், நடிகர் விஜய்யின் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளில் தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
போதைப்பொருளை நாட்டு மக்களிடையோ, இளைஞர்களிடையோ விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய கலைத்துறையினர் கொக்கைன் என்ற கொடிய போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். கஞ்சா வழக்கில் சாதாரண இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஆனால், பிரபல நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக வெளிப்படையாக பிரபல பாடகி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுமக்களிடையே கொக்கைன் என்ற போதைப்பொருள் பயன்படுத்தினால், அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது என்று இளைய சமூகத்தினர் இடையே மற்றும் மாணவர்கள் இடையே எண்ணம் உருவாகியுள்ளது பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, குற்றம்சாட்டப்பட்ட அனைத்து நடிகர், நடிகைகளையும் உடல் பரிசோதனை செய்து போதைப்பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து, இவர்களுக்கு எங்கிருந்து கொக்கைன் கிடைத்தது என்பது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வீரலட்சுமி வலியுறுத்தியுள்ளார்.
Read More : வங்கியின் லோன் வாங்குவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? நீங்களும் இந்த தவறை பண்ணாதீங்க..!!