fbpx

ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா….! ஆனா வச்சாங்கய்யா ஒரு ட்விஸ்ட்….!

விஜய் தொலைக்காட்சி வரலாற்றில் சற்றேறக்குறைய 1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களே சலித்துக் கொள்ளும் அளவிற்கு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா.

பாரதியின் தலையில் அடிபட்டு அவருடைய பழைய நினைவை இழப்பது பலமும் அவருக்கு நினைவு திரும்புவதற்காக கண்ணம்மா பழைய நினைவுகளை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார். அதன்படி தற்போது பாரதியும் பழையபடி மாறிவிட்டார்.

அதே நேரம் கண்ணமாவை சமாதானப்படுத்துதற்காக பல முயற்சிகளை பாரதி மேற்கொண்டும் கண்ணம்மா சமாதானம் ஆகாததால் பாரதி ஒரு அதிர்ச்சி முடிவை மேற்கொள்கிறார். அதாவது, அமெரிக்காவில் கிடைத்திருக்கும் வேலைக்கு அவர் தயாராகிவிட்டதாக தெரிவித்து விட்டு விடை பெற்று செல்கிறார்.

கண்ணம்மா அவருடைய வீட்டிற்கு சென்று பழைய நினைவுகளை நினைத்து அழ தொடங்குகிறார்.அதன் பிறகு தான் கண்ணம்மாவிற்கு தெரிகிறது பாரதி இன்னும் நம்முடைய மனதில் தான் இருக்கிறார் என்று. பாரதி மற்றும் அவருடைய குடும்பம் செல்லும் காரை அவர் பின் தொடர்ந்து செல்கிறார்.அவர்கள் அதன் பிறகு ஒன்றிணைந்து விடுகிறார்கள்.

பாரதி மற்றும் கண்ணம்மா உள்ளிட்ட இருவரும் ஒன்றிணைந்து விட்டதால் இன்றுடன் இந்த தொடர் முடிவுக்கு வந்துவிடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், திடீரென்று இயக்குனர் இந்த எபிசோடில் ஒரு திருப்புமுனையை வைத்திருக்கிறார். அதாவது மீண்டும் தொடரும் என்று போட்டு எபிசோட் முடிவுக்கு வருகிறது.ஆகவே இந்த தொடரின் கிளைமேக்ஸ் அடுத்த வாரம் தான் வரவிருக்கிறது.

Next Post

வானில் நிகழ்ந்த அதிசயம்..!! நீங்களும் இதை பார்த்தீங்களா..? வைரல் வீடியோ..!!

Sun Jan 29 , 2023
வானில் நட்சத்திரங்கள் தென்படும் நிலையில், ஜனவரி 18ஆம் தேதி இரவு ஒரு புதிய ஒளியும் தென்பட்டுள்ளது. அந்த ஒளியை ஹவாயில் உள்ள மௌனா கீ வான்காணகத்தில் உள்ள கண்காணிப்பு மையத்தால் இயக்கப்பட்ட சுபாரு-அசாஹி ஸ்டார் கேமராவால் படம் பிடித்தனர். இந்த வித்தியாச நிகழ்வை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். தொலைநோக்கியில் பதிவு செய்யப்பட்ட அந்த டைம்லேப்ஸ் வீடியோவின் இடது மூலையில் ஒரு பிரகாச ஒளி புள்ளியைப் போல சுழல்வதைக் காட்டியது. விரைவிலேயே புள்ளி […]
வானில் நிகழ்ந்த அதிசயம்..!! நீங்களும் இதை பார்த்தீங்களா..? வைரல் வீடியோ..!!

You May Like