fbpx

Vijay TVK Party | கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு..!! தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை..!!

தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Vijay TVK Party | நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்படவுள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதிதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More : https://1newsnation.com/actor-vijay-remove-the-differences-of-gender-and-democracy-vijays-party-members-take-oath/

Chella

Next Post

"கோவில்கள் மட்டுமல்ல, மருத்துவக் கல்லூரிகளும் கட்டுகிறோம்" - ஸ்ரீ கல்கி தாம் விழாவில் பிரதமர் மோடி பட்டியலிட்ட 10 சாதனைகள்.!

Mon Feb 19 , 2024
உத்திர பிரதேசம் மாநிலம் சம்பாலில் உள்ள ஸ்ரீ கல்கி தம் கோவிலின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். அவருடன் உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கல்கி தம் அறக்கட்டளையின் நிறுவனர் ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “இன்று, புனிதர்களின் பக்தியுடனும், பொதுமக்களின் உணர்வுடனும், மற்றொரு புனித ஸ்தலத்திற்கு அடிக்கல் […]

You May Like