பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இன்று ஹாலிவுட்டில் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ன்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா தமிழ் திரையுலகில் தான் முதன் முதலில் அறிமுகமானார். ஆம். 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் தான் பிரியங்கா சோப்ராவின் முதல் படம்.
இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழன் திரைப்படத்தில் தனது மகளின் அனுபவம் குறித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் “ உலக அழகி போட்டிக்குப் பிறகு, தனக்கு ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை. அவர் தமிழன் படக்குழுவினரின் வாய்ப்பை கூட நிராகரித்துவிட்டார்.
இருப்பினும், தயாரிப்பாளர்கள் விரைவில் பிரியங்காவின் சகோதரரைத் தொடர்பு கொண்டனர். அவர் மூலம் பிரியங்காவின் தந்தை உடன் பேசினர். கோடை விடுமுறையில் நடிப்பதற்கு நடிகையை ஒரு வாய்ப்பை வழங்குமாறு அவரது தந்தைதான் சம்மதிக்க வைத்தார். பிரியங்கா சோப்ரா தனது தந்தை சொன்னதால் மட்டுமே படத்தில் நடித்தார்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மது சோப்ரா “ பிரியங்கா சோப்ராவுக்கு விரைவிலேயே தளபதி விஜய் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.. பிரபுதேவாவின் சகோதரர் ராஜு சுந்தரம் தமிழன் படத்திற்கு நடன இயக்குனர். அவர் சில கடினமான நடன அசைவுகளை கற்றுக்கொடுத்தார். ஆனால். ஒரு தொழில்முறை நடனக் கலைஞரான விஜய் பிரியங்காவிடம் மிகவும் பொறுமையாக இருந்தார். பிரியங்கா சோப்ரா ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும், வசனங்களைப் பேச வேண்டும், நடனமாட வேண்டும். இருப்பினும், பிரியங்கா சோப்ரா விரைவில் நடனம் பழகிக் கொண்டார். படத்தின் படப்பிடிப்பு முடியும் போது விஜய்யின் நெருங்கிய தோழியானார்.
தமிழன் படப்பிடிப்பின் போது, பிரியங்காவும் நடிப்பை ரசிக்கத் தொடங்கினார் என்றும் மது சோப்ரா தெரிவித்தார்.
தமிழன் படத்திற்கு பின்னர், பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்புக்காக சர்வதேச அளவில் நற்பெயரைப் பெற்றுள்ள பிரியங்கா சோப்ரா மேலும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளார்.
தற்போது, பிரியங்கா சோப்ரா தற்போது இரண்டு ஆங்கில படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது முதல் திட்டம் ஹெட் ஆஃப் ஸ்டேட், இலியா நைஷுல்லர் இயக்குகிறார். இதில் இட்ரிஸ் எல்பா, ஜான் சீனா, ஜாக் காயிட் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்ல் அர்பன், இஸ்மாயில் குரூஸ் கோர்டோவா மற்றும் பலர் நடிக்கும் ஆக்ஷன் படமான தி ப்ளஃப் படத்திலும் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்யைப் பொறுத்தவரை, தற்போது ஹெச். வினோத் இயக்கும் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். ஒரு அரசியல் ஆக்ஷன் படம் என்று கூறப்படும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : 50 வினாடிக்கு ரூ.5 கோடி சம்பளம்.. இந்த தமிழ் நடிகையின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?