fbpx

இன்னும் சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வரவுள்ள விஜய்..! காரணம் என்ன..?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழக கொள்கை விளக்க மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெற இருந்தது.

இந்த மாநாட்டிற்கு காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதுவரை பல லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்துள்ளனர். மேலும் பலர் வந்துகொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. காலை முதலே தொண்டர்கள் வந்துவிட்டதால் உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் சூழ்நிலையும் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் பலர் வெயிலின் தாக்கத்தால் தண்னீர் கிடைக்காமல் மயக்கமடைந்து வருகின்றனர். அவர்களுக்கு முதலுதவி செய்ய வரும் ஆம்புலன்ஸ்க்கும் வழி இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில் மாலை 4 மணிக்கு நடைபெறவிருந்த மாநாட்டை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நடக்க உள்ளது. நேற்று இரவு மாநாடு நடக்கும் திடலுக்கு சென்ற தவெக தலைவர் விஜய், அரங்கத்தை சுற்றி பார்த்துவிட்டு அரங்கத்தில் உள்ளே இருக்கும் கேரவனில் தங்கினார். மேலும் கேரவனில் இருந்தபடியே தொலைக்காட்சி, சிசிடிவி மூலம் மாநாட்டு திடலை பார்வையிட்டு குழுவுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில் மாநாடு நடக்கும் திடலில் உள்ள தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பௌன்சர்களும் திணறி வருகின்றனர். பொது செயலாளர் ஆனந்த் பலமுறை கேட்டு கொண்டும் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக தொண்டர்களை அமைதி படுத்தவும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் மாநாட்டு மேடைக்கு, இன்னும் சற்று நேரத்தில் விஜய் வர உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: ‘தயவு செய்து கொஞ்சம் பொறுமையா இருங்க’..!! ‘தண்ணீர் பாட்டிலுடன் மிக்சர், பிஸ்கட் வரும்’..!!

English Summary

Vijay will come to the conference stage in a little while..! What is the reason..?

Kathir

Next Post

செல்போன் ஹேக்கர்களை ஓடவிடும் செயலி..!! அது என்ன ’டிஜிட்டல் காண்டம்’..? இவ்வளவு பயனுள்ளதா..?

Sun Oct 27 , 2024
Billy Boy, a health company from Germany, has launched an app called Comtum.

You May Like