fbpx

விஜயபாஸ்கர், ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் தொடரும் சோதனை..!! சிக்கியது என்ன..? பரபர தகவல்..!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் 2017 முதல் 2020 வரை மிகவும் நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை சென்மேரிஸ் சாலையில் உள்ள ஏழு மாடி கண்ணாடி கட்டிடமான ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையை நடத்தி வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் ஆளும் திமுகவுக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது. இதன் நிர்வாக இயக்குனராக லோட்டஸ் பாலா என்பவர் உள்ளார்.

அதேபோல, நேற்று முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்றும் சோதனை தொடர்கிறது.

Read More : ”நீங்களாச்சும் தருவீங்கன்னு தானே வந்தேன்”..!! எம்பி சீட் கொடுத்த மறுத்த பாஜக..!! அப்செட்டில் விஜயதரணி..!!

Chella

Next Post

உஷார்..!! வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள்..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

Fri Mar 22 , 2024
வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்படும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை தினமும் தெரிவிக்க வேண்டும் என வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில், வங்கி கணக்குகளில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் மற்றும் அதிக தொகைக்கான பரிவர்த்தனைகள் குறித்த தினமும் தகவல் தெரிவிக்க வேண்டும் என வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நிறைவுபெறும் வரை […]

You May Like