fbpx

Vijayakanth | 71-வது பிறந்தநாள்..!! தொண்டர்களை நேரில் சந்தித்தார் விஜயகாந்த்..!! அதிர்ந்த கோயம்பேடு..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்களை சந்தித்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், 71-வது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்திப்பார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரசிகர் மன்ற காலம் முதல் விஜயகாந்துடன் பயணிப்பவர்களும், மாவட்டச் செயலாளர்களும் விஜயகாந்தை நேரில் சந்திக்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் குவிந்தனர்.

இதையடுத்து, அங்கு குவிந்திருந்த கட்சி தொண்டர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்தார். அப்போது இருக்கையில் அமர்ந்தவாறு தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். இதனை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரித்தனர். அப்போது, விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘படைத் தலைவன்’ படத்தின் பெயர் மற்றும் படத்தின் முன்னோட்ட காட்சிகளை விஜயகாந்த் வெளியிட்டார்.

இதையடுத்து, விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ”விஜயகாந்த் தற்போது நலமுடன் இருக்கிறார். வாராரு வாராரு அழகர் பாட்டு பாடல்களைக் கேட்டு விஜயகாந்த் டான்ஸ் ஆடுகிறார். உண்மை தொண்டர்களின் வாழ்த்து விஜயகாந்தை நூறாண்டு வாழ வைக்கும். அதோடு நமது முரசு நாளை தமிழக அரசு” என்று பேசினார்.

Chella

Next Post

நில ஒருங்கிணைப்பு சிறப்பு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்…! சுற்று சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு..!

Fri Aug 25 , 2023
தமிழ்நாடு நிலா ஒருங்கிணைப்பு சட்டம் 2023க்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இந்த சட்ட மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். அன்றைக்கே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேறியது. பிறகு தமிழ்நாடு ஆளுநரிடம் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் இங்த சட்ட மோசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதலளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ல் தமிழக அரசின் அரசிதழில் இந்த […]

You May Like