fbpx

எம்ஜிஆரை மிஞ்சிய விஜயகாந்த்..!! சமாதியில் தொடங்கப்போகும் சூப்பர் திட்டம்..!!

விஜயகாந்தின் இறப்பு மிகப்பெரிய தாக்கத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் அவர் நடிகர் மற்றும் அரசியல்வாதி என்பதை காட்டிலும் நல்ல மனிதர் என்பதுதான். நடிகர் சங்க தலைவராக இருந்த போது விஜயகாந்த் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி, தன்னுடைய வீட்டிற்கு உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து சாப்பாடு கொடுத்துவிட்டு தான் அனுப்பி வைப்பாராம். விஜயகாந்துக்கு முன்னதாக எடுத்துக் கொண்டால் எம்ஜிஆர் தான் ஒரு வள்ளலாகவே வாழ்ந்து வந்தார்.

அவருடைய வீட்டில் 24 மணி நேரமும் அடுப்பு எரிந்து கொண்டிருக்குமாம். எம்ஜிஆர் பாணியை விஜயகாந்த் பின்பற்றி வந்ததால் தான் கருப்பு எம்ஜிஆர் என்று கேப்டன் போற்றப்பட்டார். இந்நிலையில், எம்ஜிஆர் தாண்டி ஒருபடி மேலாகவே அவருடைய புகழ் பரவ போகிறது. அதாவது இலவசமாக மதிய உணவு விஜயகாந்த் சமாதியில் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். ஆனால், இதை கேப்டனின் குடும்பம் செய்யவில்லையாம். அதாவது அவரின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஒன்றாக முடிவெடுத்து இதை செயல்படுத்த முன்வந்துள்ளனர்.

தினமும் ஒவ்வொரு மாவட்ட தலைவர் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள். விரைவில் இதை செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எப்போதுமே ஏழை, எளிய மக்கள் வயிறார உண்ண வேண்டும் என்று நினைக்கும் கேப்டனின் இறப்புக்கு பின்பு இவ்வாறு ஒரு நல்ல திட்டத்தை மேற்கொள்வது பாராட்ட பட வேண்டும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானம் இனி கேப்டனின் பெயரில் தொடர்ந்து வழங்க உள்ளனர்.

Chella

Next Post

பஸ் ஸ்டிரைக்கால் ஸ்தம்பிக்கும் தென் மாவட்டங்கள்..!! எங்கும் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு..!!

Tue Jan 9 , 2024
தமிழ்நாடு அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, திங்கட்கிழமை இரவு 8 மணியில் இருந்தே தமிழகம் முழுவதும் பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டது. 9 மணி முதல் மிக மிகக் குறைவாகவே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் ஸ்தமிபித்து போயினர். மதுரை, நெல்லை, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே […]

You May Like