fbpx

விஜயகாந்தா இது..? குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்..!! எப்படி ஆகிட்டாருன்னு பாருங்க..!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேப்டன் விஜய்காந்த் என்றாலே கம்பீரம் தான் நினைவுக்கு வரும். ரசிகர்களால் கேப்டன் என செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த், ஒருகாலத்தில் தமிழ்த் திரையுலகின் டாப் ஹீரோவாக திகழ்ந்தார். புரட்சிகரமான வசனங்கள், கால்களால் எகிறி அடிக்கும் வித்தியாசமான சண்டைக் காட்சிகள் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார்.

மாநகர காவல், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சத்ரியன், ரமணா என விஜயகாந்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே பல படங்கள் வெற்றி விழா கொண்டாடின. சினிமாவைப் போல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே வலம் வந்தார் கேப்டன். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர், ஆரம்ப காலத்தில் அங்கேயும் தனக்கான தனி முத்திரை பதித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா, அரசியலில் தலை காட்டாமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு அவர் தனது குடும்பத்துடன் கொண்டாடும் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தில் நன்கு உடல் மெலிந்து விஜயகாந்த் காணப்படுகிறார். எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிவிட்டாரே என அவரது ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

ரயில்வே ஸ்டேஷனில் கடை துவங்குவது எப்படி..? ஈசியா பணம் சம்பாதிக்கலாம்..!! சூப்பர் ஐடியா..?

Sun Nov 12 , 2023
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கான இந்தியன் ரயில்வே மக்களுக்கு பல்வேறு விதமான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ரயில்வே ஸ்டேஷன்களில் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் வந்து செல்வதால் தொழில் துவங்குவதற்கு ரயில்வே ஸ்டேஷன் ஒரு அற்புதமான இடமாகும். டீ, காபி, உணவு, பாட்டில் தண்ணீர், புத்தகங்கள், பொம்மைகள், நியூஸ் பேப்பர் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் கடையை துவங்குவதன் மூலமாக நிலையான ஒரு வருமானத்தை பெறலாம். […]

You May Like