பெரியார் குறித்து சீமான் கூறி வரும் கருத்துகள் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், சீமானை விமர்சித்து புதிய வீடியோ ஒன்றை நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ”மிஸ்டர் சீமான் பெரியார் யார் என்று உங்களுக்கு தெரியாதா? அப்படியா? பெரியார் யார் அவர் தமிழ்நாட்டுக்கு என்னவெல்லாம் செய்தார் என பெரியாரிஸ்டுகள் வந்து சொல்லுவாங்க. தாய் தந்தையை குறிப்பிட்டு பேசியிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே ஒரு தாய் தந்தைக்கு பிறந்திருந்தால் நீங்க சொல்லுங்க.
இப்போ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அந்த மைக்கை வச்சு பேசுங்க. நீங்க தான் எனக்கு பணம் கொடுத்தீங்க. ஆனா, என்னயவே தப்பா பேசுனீங்க. கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்பேன்னு சொல்றீங்க. இந்த ஜென்மத்துல நீங்க ஜெயிக்க மாட்டீங்க. என்னோட சாபம் உங்கள ஜெயிக்க விடாது. தொண்டை வத்த வத்தக் கற்றினாலும் ஜெயிச்சிருவோம் என்று நினைத்தீர்களா? ஒன்றுமே கிடையாது” என கூறியுள்ளார்.