சென்னையை அடுத்துள்ள பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் வழக்கறிஞர் அணி கூட்டம் இன்று காலை 11:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் இதுவரை வழக்கறிஞர் அணி உருவாக்கப்படவில்லை. தற்போது அதற்கான முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தமிழக முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அதேபோல், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் மீது வழக்குகள் போடப்பட்டால் அதை சட்டரீதியாக அணுக அறிவுரை
அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.