fbpx

விஜய் போட்ட உத்தரவு..!! சென்னையில் டிசம்பர் 14ஆம் தேதி இலவச மருத்துவ முகாம்..!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் 25 இடங்களில் வரும் டிச.14ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயல் காரணமாக, பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் 14ஆம் தேதி காலை 8.00 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

காரில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அரசு அதிகாரியின் மகள்.! டீக்கடைக்காரன் உட்பட 2 பேர் கைது.!

Tue Dec 12 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரியின் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று நபர்களை உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் அரசு அதிகாரியாக இருப்பவரின் மகள் அங்குள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி கடத்தப்பட்ட மாணவி வாகனத்தில் வைத்து மூன்று நபர்களால் கூட்டு […]

You May Like