3 மாதங்களில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் இதற்காக வரும் வியாழன் அன்று முக்கிய தகவல் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
நடிப்புக்கு பிரேக் விட்டு முழுநேர அரசியலில் நடிகர் விஜய் களமிறங்கபோவதாக அண்மையில் தகவல்கள் பரவின. அந்தவகையில் ஆங்காங்கே விஜய் மக்கள் இயக்க பொதுக்கூட்டம் மற்றும் ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், விரைவில் நடிகர் விஜய் புதிய கட்சியை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கான தயார் நிலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் தற்போது இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அவர்களுடைய மாவட்ட செயலாளர்களும் தலைவர்களின் கூட்டம் இடம்பெறக்கூடிய அந்தக் கூட்டத்தில் கூட இந்த தகவல்களை ஏற்கனவே அவர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். அதாவது சொன்னால் சொன்னபடி செய்வோம், அரசியலுக்கு வருகிறோம் என்றெல்லாம் ஏமாற்ற மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக வரும் வியாழன் அன்று கட்சி குறித்த முக்கிய தகவல் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதுபோன்றே இரண்டு மூன்று மாதங்களில் அரசியலுக்கான ஆயத்தப் பணிகள் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார்கள். மாபெரும் பொதுக்கூட்டத்திற்காக இடத்தை தற்போது தேர்வு செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது மதுரை, திருச்சி போன்ற இடங்களை தற்போது தளபதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் பட்சத்தில் அந்த இடத்தை தேர்வு செய்து பொதுக்கூட்டம் நடத்துவதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தளபதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் பட்சத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் முழு அர்ப்பணிப்பும் உழைப்பும் கொடுத்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.