பிரபல பாலிவுட் நடிகர் விக்ரம் கோகலே புனேவில் காலமானார்.
மராத்தி நாடகம் மற்றும் பாலிவுட் படங்களான ஹம் தில் தே சுகே சனம், பூல் புலையா போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் விக்ரம் கோகலே புனேவில் காலமானார். அவருக்கு வயது 82. மூத்த நடிகர் உடல்நலக் குறைவால் 15 நாட்களுக்கும் மேலாக தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை அளித்தும் உடல்நலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் நேற்று காலமானார். இவரது மனைவி தர்மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவிற்கு நடிகர் அஜய் தேவ்கன் ட்விட்டரில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார், அதில் “விக்ரம் கோகலே சார் தான் நடித்த கதாப்பாத்திரங்கள் மக்களை அதிக அளவில் கவர்ந்தார். அவர் எப்போதும் நிமிர்ந்து நின்றார். அவருடன் திரை நேரத்தை பகிர்ந்து கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அவரது மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.