தமிழ் திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரெடுத்த்ந் சங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படத்தில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பின் மூலமாக ரசிகர்களை தன் வசம் இழுத்தார் நடிகர் விக்ரம். அதோடு, கதாநாயகியாக சதா, முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், விவேக் என்று பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
அந்நியன், அம்பி, ரெமோ என்று 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய சியான் விக்ரம் இந்த திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியை தன்னுடைய திரை வாழ்வில் கண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிலையில் தான் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த விக்ரம் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக 2.5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இவர் தற்சமயம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்களான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு, இவருடைய நடிப்பில் ஏற்கனவே உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.