fbpx

Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை…!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அன்னியூர் சிவா 130 தபால் வாக்கு பெற்று முன்னிலை பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரம் ஜூலை 8-ம் தேதி நிறைவுற்ற நிலையில், ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

82.48 சதவீத வாக்கு பதிவானது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் வழக்கம்போல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.

English Summary

Vikravandi by-election candidate Annieyur Siva is leading

Vignesh

Next Post

வீடியோ கேம்கள் விளையாடுவதால், குழந்தைகளின் மனநிலை மோசமடைகிறது!. இந்த பிரச்சனைகள் ஏற்படும்!

Sat Jul 13 , 2024
Playing Video Games Makes Children's Mood Deteriorate!. These problems will occur!

You May Like