fbpx

மது போதையில் இருந்தால் உறவுகள் கூட மறந்து போகுமா……? சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…..!

தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலை, கற்பழிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. இதனை தடுப்பதற்கு என்னதான் வழி என்று காவல்துறையினர் பலவாறு யோசித்துப் பார்க்கிறார்கள். ஆனாலும் இதனை தவிர்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

ஆனால் இப்படி அவர்கள் தவித்து வருவதை விட அதனை குறைப்பதற்கு ஒன்றை மட்டும் தமிழக அரசு செய்தால் போதும், நிச்சயம் தமிழகத்தில் இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்கவே நடக்காது. ஆனால் தமிழக அரசு அதை செய்ய மிகப்பெரிய தயக்கத்தை காட்டி வருகிறது.

அதாவது இது போன்ற விரும்பத் தகாத செயல்கள் தமிழகத்தில் நடப்பதற்கான முக்கிய காரணமே மதுவுதான் இந்த மதுவை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழித்து விட்டால் நிச்சயம் தவறுகள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இது போன்ற தவறுகளில் ஈடுபடும் 75% நபர்கள் மது போதையில் தான் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆகவே தான் மதுவை தமிழகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருக்கிறது.

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே இருக்கின்ற அவள் ஒரு கிராமம் சின்னத்தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (43). இவர் நெமிலி தாலுகா உத்திரம்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. ஆகவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் ராமதாஸ் தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது ராமதாசுடன் அவருடைய மனைவி தகராறில் ஈடுபட்டு ஆத்திரம் கொண்டு, அவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் இத்தகைய நிலையில் தான், ராமதாஸ் மது போதையில் 11ம் வகுப்பு படிக்கும் தன்னுடைய 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை வழங்கியிருக்கிறார்.

மனநலம் பாதிக்கப்பட்ட ராமதாஸின் மகன் எதுவும் நடக்காதது போல வீட்டில் அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இது தொடர்பாக அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது மாணவி புகார் வழங்கியுள்ளார்.

அந்த புகார் தொடர்பாக, அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காஞ்சனா இது குறித்து வழக்கு பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் ராமதாசை கைது செய்துள்ளார். மகளுக்கு பாலியல் தொந்தரவு வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

பள்ளி விடுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற தற்கொலை முயற்சி……! விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை…..!

Thu Aug 3 , 2023
தற்சமயம் இளம் தலைமுறையினர் அனைவரும் அனைத்து விஷயங்களிலும் தங்களுடைய விருப்பப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னால் அதில் உள்ள ஆபத்தை தெரிந்து கொண்டு அதன் பிறகு செய்ய வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் இந்த காலத்திலும் பிள்ளைகளின் உணர்வுக்கும், விருப்பத்திற்கும் மதிப்பளிக்காத பெற்றோர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சில பெற்றோர்கள் இருப்பதால்தான், தன்னுடைய […]

You May Like