விநாயகr சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பல வங்கிக் கிளைகள் இன்று மூடப்பட்டுள்ளன. எனவே உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்வதற்கு முன், விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும் மாநிலங்களின் பட்டியலையும், எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதையும் நீங்கள் கண்டிப்பாகக் குறித்துக்கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வங்கி செயல்பாடுகள் மூடப்படும் மாநிலங்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குறிப்பிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வங்கிகள் மூடப்படும் நகரங்களின் பட்டியல் இதோ.
- அகமதாபாத்
- பேலாபூர்
- பெங்களூரு
- புவனேஸ்வர்
- சென்னை
- ஹைதராபாத்
- மும்பை
- நாக்பூர்
- பனாஜி
இருப்பினும், வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் மாறுபடும் மற்றும் அனைத்து வங்கி நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின் அறிவிப்பைப் பொறுத்தது.. ஒரு சில பண்டிகைகள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சில பண்டிகைகள் உள்ளூர் அளவில் மட்டும் கொண்டாடப்படுகின்றன.. எனவே அந்தந்த பண்டிகைகளை பொறுத்து வங்கி விடுமுறைகள் மாறுபடும்..