fbpx

வைரல் வீடியோ : ஸ்கார்பியோ கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரல் …

அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஸ்கார்பியோ கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வைரலாகியுள்ளது.

அருணாச்சலபிரதேசத்தில் சுபன்சிரி மாவட்டத்தில் சிபுட்டா கிராமத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படியாவது கடந்து சென்றுவிடலாம் என நினைத்த ஓட்டுனர் ஸ்கார்பியோ காரை ஓட்டிச்சென்றார். பாதி தூரம் சென்றதும் அந்த கார் நடுவில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த கார் அப்பகுதியில் பள்ளத்திற்கு உருண்டு ஓடும் இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சியில் அந்த காரின் அருகே 3 பேர் நிற்கின்றனர். முழங்கால் அளவிற்கு தண்ணீர் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த காரில் இருந்தவர்கள் இறங்கி உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளத. எனினும் இன்னும் 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Next Post

தலைமைஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு +2 மாணவன் ஓட்டம்

Sat Sep 24 , 2022
உத்தரபிரதேசத்தில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற +2 மாணவன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் சதர்பூர் என்ற பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. இதில் தலைமைஆசிரியராக பணியாற்றி வருபவர் ராம்சிங்வர்மா . நேற்று இருமாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தலைமை ஆசிரியர் தலையிட்டு இருவரையும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரடைந்த மாணவர் , லைசன்ஸ் இல்லா துப்பாக்கியை சட்டத்திற்கு புறம்பாக பள்ளிக்கு எடுத்து […]

You May Like