கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக் காடானது. வீடுகளுக்கும் மழை நீர் புகுந்து மக்கள் பெறும் சிரமத்திற்கு ஆளாகினர். இதில், தங்களது முக்கிய ஆவணங்களை மக்கள் பறிகொடுத்தனர். இதனால், நெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது, […]

நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி (சனிக்கிழமை) 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்கள் நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று சான்றிதழ் நகல்களைப் பெற்றுக்கொள்ளலாம். பிறப்பு, இறப்பு சான்று, ஜாதி சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றின் நகல்களைப் பெற ஏதுவாக இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு […]

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித் தரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த 15, 16, 17 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதில் அந்த மாவட்டங்களை சுற்றியுள்ள ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் வெள்ளம் ஏற்பட்டது . இதில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். இதில் […]

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிர்மலா சீத்தாராமன், இன்று தூத்துக்குடி செல்ல உள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் […]

திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மற்றும் அதை தொடர்ந்த வெள்ளத்தால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது என்றால், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிவால் பாதிப்பு உண்டானது. நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட […]

டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார். தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,”தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய மொத்தம் 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மழை […]

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ள நீரில் மிதந்து வரும் அடையாளம் தெரியாத நபரின் சடலம். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலமணி நேரம் நீடித்த மழையால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர். […]

வரலாறு காணாத பேரிடரில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பல மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு […]

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது, குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் […]

மிக்ஜாம் புயல் நிவாரணம் வழங்க தமிழக அரசு கட்டுப்பாடு நிர்ணயம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட […]