fbpx

இந்த திரைப்படம் தான் படையப்பா படத்தை விட அதிகமாக வசூலித்ததாம்….! உண்மையை கூறிய பிரபல நடிகர்….!

கடந்த 1999 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படையப்பா. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த், சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், கவுண்டமணி, நாசர் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்த திரைப்படம் வெளியானது. சற்றேற குறைய 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் அந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

படையப்பா திரைப்படம் வெளியாகி 24 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனாலும், இந்த திரைப்படத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. அந்த அளவிற்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அந்த திரைப்படத்தின் கதைக்களத்தை அமைத்திருந்தார். அதோடு, அதில் நடித்த நடிகர்களும் கனகச்சிதமாக தங்களுடைய கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்கள்.

படையப்பா திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இந்த திரைப்படம் வெளியான அதே வருடத்தில், இயக்குனர் துரை இயக்கத்தில் குஷ்பூ, விவேக், வடிவேலு, கோவை சரளா, நாசர், ஊர்வசி, கனகா, லிவிங்ஸ்டன் போன்றோர் நடிப்பில் வெளியான விரலுக்கேத்த வீக்கம் திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

படையப்பா திரைப்படம் பெற்ற அதே வரவேற்பை இந்த படமும் பெற்றது. அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் தான் என்று சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் தான் படையப்பா திரைப்படத்தை விட இந்த திரைப்படம் தான் அதிக வசூலை செய்திருப்பதாக அந்த காலகட்டத்தில் செய்திகள் வெளியானதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் நடிகர் லிவிங்ஸ்டனிடம் கேட்டபோது, இது பற்றி எனக்கு சரியாக விவரம் தெரியவில்லை. ஆனால், விரலுக்கேத்த வீக்கம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தின் இயக்குனர் துரை என்னிடம் படையப்பா திரைப்படத்தை விட இந்த திரைப்படத்திற்கு தான் வசூல் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்தார் என கூறியுள்ளார்.

Next Post

கொடியேற்றத்துடன் தொடங்கிய குலசை தசரா திருவிழா… வேடம் அணிபவர்களுக்கு காவல் துறையின் முக்கிய அறிவிப்பு…

Sun Oct 15 , 2023
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது. பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, வீதி வீதியாக சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள். […]

You May Like