fbpx

விராட் கோலி, அனுஷ்கா சர்மா அருந்தும் குடிநீர் இத்தனை ஆயிரமா!!! ஷாக் ஆன ரசிகர்கள்….

ஒரு சிலர் என்ன தான் வசதியாக இருந்தாலும், வெளியே செல்லும்போது தண்ணியை காசு கொடுத்து வாங்குவதா என்று கையில் பாட்டிலுடன் சென்று விடுவது உண்டு. அப்படியே தண்ணீர் பாட்டிலை மறந்து விட்டு சென்றாலும் அருகில் இருக்கும் கடைகளில் “அண்ணா, கொஞ்சோ தண்ணி குடுங்க” என்று கேட்டு வங்கி குடிப்பது உண்டு. ஆனால் என்ன ஆனாலும் அவர்கள் தண்ணீரை மட்டும் காசு கொடுத்து வாங்கவே மாட்டார்கள். பொதுவாக இது தான் நம்ம ஊரு வழக்கம். ஆனால் இங்கு ஒரு தம்பதி 1 லிட்டர் தண்ணியை ரூ. 4 ஆயிரம் கொடுத்து வாங்குகிறார்களாம்… ஆம், அது வேறு யாரும் இல்லை பலருக்கு முன் உதாரணமாக வாழும் இந்தியாவின் முன்னணி செலிப்ரெட்டி தம்பதிகளான விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தான்.

கிரிக்கெட் வீரராக விராட் கோலியும், நடிகையாக அனுஷ்காவும் தங்களது துறைகளில் உச்சம் தொட்டிருக்கிறார்கள். இருவரும் இணைந்தும் பல விளம்பரங்களில் நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இருவரும் சேர்ந்து பல நிறுவனங்களை தொடங்கி, பல முன்னணி நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளனர். சமீப காலமாக தம்பதி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என தங்களின் ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறார்கள். இதற்க்கு முக்கிய காரணம் விராட், தனக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தனது மனைவியுடன் செல்போனில் பேசுவது தான். அவர் தனது குடும்பத்துடன் செல்போனில் அடிக்கடி பேசும் வீடியோ வைரலானதை அடுத்து கணவர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் பற்றி தெரியாத பல பெண்களும் இவருக்கு ரசிகர்களாகி விட்டனர்.

அநேகரால் கொண்டாடப்படும் இந்த செலிப்ரெட்டி தம்பதிகள் இருவரும், உடல் நலத்திற்கு மிக முக்கியத்துவம் அளிப்பது உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான். அந்த வகையில், இருவரும் லிட்டர் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள தண்ணீரை அருந்துவதாக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன. இவர்கள் ஏவியன் நேச்சுரல் ஸ்பிரிங் வாட்டர் என்ற தண்ணீரை அருந்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் இயற்கையான தண்ணீர் என்று கூறப்படுகிறது. இந்த தண்ணீர் ஏவியன் லெஸ் பெயின்ஸ் என்ற இடத்தில் உள்ள ஏரியில் இருந்து எடுக்கப்படுகிறது. பிரான்சில் உள்ள இந்த பகுதி சுவிட்சர்லாந்து எல்லையையொட்டி அமைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீரை ப்ளாக் வாட்டர் என்றும் அழைக்கிறார்கள்.

இந்த நீரை குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து நன்றாக இருப்பதோடு, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் பாதுகாக்கப்படும், எடை குறைப்புக்கும், மன அழுத்தம் குறைப்பதற்கும் உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. விராட் கோலி இந்த தண்ணீரை பிரான்சில் இருந்து இறக்குமதி செய்கிறாராம். அந்த வகையில் ஒரு பாட்டில் தண்ணீருக்கான செலவும் ரூ. 4000 என்று கூறப்படுகிறது. கரிஷ்மா கபூர், மலைகா அரோரா, கவுரி கான், டைகர் ஷெரோஃப் உள்ளிட்டோரும் இந்த ப்ளாக் வாட்டரை அருந்துகிறார்கள்.

Read more: “எனக்கு அம்மா வேணும் பா” கதறி துடித்த 4 வயது சிறுவன்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

English Summary

virat-and-anushka-drinks-water-worth-4000

Next Post

இளமை பருவத்தில் இந்த தவறுகளை மட்டும் பண்ணிடாதீங்க..!! எதிர்காலத்தில் ரொம்ப கஷ்டம்..!! சாணக்கியர் கூறுவது என்ன..?

Thu Nov 7 , 2024
In Chanakya Neeti, Chanakya mentions many things related to life.

You May Like