fbpx

புயலுக்கு மத்தியில் காதல் மனையுடன் வீடியோ கால் பேசிய விராட் கோலி!! – வைரலாகும் வீடியோ

விராட் கோலி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தன் மனைவி அனுஷ்காவுடன் வீடியோ காலில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது, இது இந்திய அணிக்கு இரண்டாவது கோப்பையாகும்.

கடந்த சனிக்கிழமையே இறுதிப்போட்டி நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்றே இந்திய அணி நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயல் காரணமாக அந்நாட்டு அரசு விமான நிலையத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர். அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், இந்திய அணி பார்படாஸில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

‘பெரில்’ புயலால் நாடு திரும்ப முடியாமல் வீரர்கள் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹோட்டல் அறையில் தங்கி இருந்த விராட் கோலி, தனது காதல் மனைவி அனுஷ்காவுக்கு பால்கனியில் இருந்து வீடியோகால் செய்தார். அப்போது புயலால் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் பயங்கர சூறாவளி காற்றை வீடியோ கால் மூலம் தனது மனைவி அனுஷ்காவுக்கு நேரடி ஒளிபரப்பு செய்தார்.

அந்த வீடியோவை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். விராட் கோலி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

English Summary

Team India’s talismanic batter Virat Kohli did a video call with his wife and the Bollywood actress Anushka Sharma and showed her Hurricane Beryl from his hotel room in Barbados on Tuesday, July 2.

Next Post

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் கலப்பு..!! தமிழ்நாடு அரசு பரபரப்பு அறிக்கை..!!

Wed Jul 3 , 2024
The Tamil Nadu government has filed a report in the Madras High Court that Kallakurichi liquor contained 8.6% to 29.7% methanol.

You May Like