விஜய் தொலைக்காட்சியில் தற்சமயம் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி தொடர். அதனைத் தொடர்ந்து, 2வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவருக்கு பதிலாக இவர் என்று குறிப்பிட்டு நடிகர்களை மாற்றுவது தொடர்கதையாகி வருகிறது.

தற்சமயம் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த சாய்காயத்ரி திடீரென்று இந்த தொடரில் இருந்து விலகி விட்டார். அதை மற்றும் அடுத்து வரவிருக்கும் காட்சிகள் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்த அவர், தன்னுடைய கரியருக்கு இது செட்டாகாது என்பதால் விலகி விட்டேன் என்று அவர் கூறிவிட்டு சென்றார்.
தற்சமயம் புது ஐஸ்வர்யாவாக முன்பு நடித்து வந்த வி.ஜே தீபிகாவையே மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.