அதிமுக பொதுக்குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக சட்ட விதிகளின் அடிப்படைக்கு விரோதமாக செயல்பட்டதால், நியமிக்கப்பட்ட பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக உறுப்பினர்கள் யாரும் கலைக்கப்பட்ட அந்த பொதுக்குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம், நேர்மையான தேர்தல்கள் மூலம் விரைவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.