Apple iTunes மற்றும் கூகுள் குரோம் டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களில் உள்ள பாதிப்புகள் குறித்து இந்திய அரசாங்கத்தின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அப்ளிகேஷன்களில் இருக்கக்கூடிய குறைபாடுகளால் ஹேக்கர்கள் ஒரு பயனரின் சாதனத்தை தொலைவிலிருந்து அணுகவும் தன்னிச்சையான கோட்களை இயக்கவும் அனுமதிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
Apple iTunes-இல் இருக்கக்கூடிய கோர் மீடியாவின் உரையற்ற சரிபார்ப்புகளால் பாதிப்பு ஏற்படுவதாக CERT தெரிவித்துள்ளது. இவற்றை ஹேக்கர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கோரிக்கைகளின் மூலம் எளிதாக ஹேக் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது . இந்த பாதிப்பு 12.13.2 பதிப்புக்கு முந்தைய ஆப்பிள் ஐ-ட்யூன்ஸ் வெர்சனை விண்டோஸில் பயன்படுத்துபவர்களுக்கு இருப்பதாகவும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்சிவ் டீம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்சிவ் டீம் கூகுள் குரோமில் இருக்கும் பாதிப்பையும் கண்டறிந்து உள்ளது. குரோமில் உள்ள யூஸ்-ஆப்டர்-ஃப்ரீ என்ற காம்போனெண்டில் உள்ள பிழை காரணமாக ஹேக்கர்கள் பயனர்களின் கணினியை எளிதாக ஆக்ஸஸ் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஹெச்டிஎம்எல் பக்கத்தின் மூலம் பயனர்களின் கம்ப்யூட்டரை தன்னிச்சையாக ஹேக் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
விண்டோஸ், ஆப்பிள் மேக் மற்றும் லினக்ஸ் போன்ற ஆபரேட்டிங் சிஸ்டம்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்கள் அதன் சமீபத்திய புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்யுமாறு கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்சிவ் டீம் அறிவுறுத்துகிறது. மேலும் ஆப்பிள் ஐ-ட்யூன்ஸ் பயணர்களும் கேட்கர்களின் அபாயங்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஐ-ட்யூன்ஸ் அப்டேட்டட் வெர்ஷனை இன்ஸ்டால் செய்யுமாறு சிஇஆர்டி தெரிவித்துள்ளது.