டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப் பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, உயர்த்தப்படும் என்றார்.
இந்த மாதம் 1ந் தேதி முதல் ஊதிய உயர்வு கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்றார். அதன்படி நடப்பு மாதத்தில் இருந்தே அவர்களுக்கு ரூ.2,000 ஊதியம் உயர்த்தப்பட்டு வழங்கப்பட உள்ளது. இதனால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.64 கோடி செலவிடப்படுகிறது என்றார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு துறை ஊழியர்களுக்கும் வரிசையாக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதுடன், உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.
Read more: ஓடும் பேருந்தில் காதல் ஜோடி உல்லாசம்.. வைரலான வீடியோவால் நடத்துனருக்கு சிக்கல்..!!