fbpx

’காத்துவாக்குல ரெண்டு காதல் பரிதாபம்’..!! 4 மாத கர்ப்பிணியை கொன்ற கொடூர காதலன்..!! அதிர்ச்சி..!!

ஈரோடு அருகே 4 மாத கர்ப்பிணி காதலியின் கழுத்தை நெறித்துக் கொன்ற காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தில் கார்த்தி – பிருந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி 4 மாத கர்ப்பிணியாக இருந்த பிருந்தா, வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த பிருந்தா, திருமணத்திற்கு முன்பு இருவரை காதலித்து வந்ததாகவும், அதில் ஒருவரை திருமணம் செய்த நிலையில், மற்றொருவருடன் காதலை தொடர்ந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் கார்த்தி வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த காதலன் அரவிந்த், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிருந்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

’காத்துவாக்குல ரெண்டு காதல் பரிதாபம்’..!! 4 மாத கர்ப்பிணியை கொன்ற கொடூர காதலன்..!! அதிர்ச்சி..!!

இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அரவிந்த் பிருந்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு சென்னை தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், காதலன் அரவிந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ரம்பா சென்ற கார் விபத்து… மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு!!

Tue Nov 1 , 2022
நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் கனடாவில் உள்ளார். நேற்று தன் குழந்தைகளுடன் வெளியே காரில் புறப்பட்டு சென்றபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. இந்நிலையில் அவர் மீட்கப்பட்டுஅருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரம்பா உயிருக்கு ஆபத்து இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. அவரது குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விபத்தில் சிக்கிய […]

You May Like