இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம், பல்வேறு கிளைகளை இந்தியாவில் கொண்டுள்ளது. இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் சார்பாக, வெளியிடப்பட்டிருக்கின்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் எந்த ஒரு பொருளும் மிகவும் தரமானதாகவே கருதப்படுகிறது. இதன் காரணமாக, பலரும் இந்த நிறுவனத்தின் பொருட்களை வெகுவாக விரும்புவதால், இந்த நிறுவனம் இந்தியாவில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதன் காரணமாக, இந்த நிறுவனத்தில் பணியாற்ற பலரும் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு அறிவிப்பை தற்போது இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற retainer consultant doctor பணியிடங்களை நிரப்புவதற்காக அந்த நிறுவனம் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக, ஒரே ஒரு காலி பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், MBBS, MD போன்ற படிப்புகளில் பட்டம் பெற்ற நபர்களாக இருப்பது மிகவும் அவசியம் என்று தெரிகிறது. அதேபோல மத்திய, மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் 65 வயதிற்கு உட்பட்ட நபர்களாக இருப்பது முக்கியம் என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த வயது வரம்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற தளர்வுகள் பற்றி அறிந்து கொள்வதற்கு, இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் 56000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் https://www.hindustancopper.com/Upload/Notice/0-638302265471475000-NoticeFILE.pdf என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, வரும் 28.9.2023 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் பங்கேற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
.