வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக அடுத்த மாதம் (நவம்பர்) நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, 09, 10, 23, 24 ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், இந்த முகாமுக்கு தேவையான வாக்காளர் படிவங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார். ஜனவரி 01, 2025 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்ப்பது எப்படி..?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை இணையதளம் அல்லது செயலியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது உங்கள் பகுதியில் நடக்கும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் அல்லது உங்கள் பகுதியின் தேர்தல் அதிகாரிகளிடம் நேரடியாகச் சென்று அதற்கான விண்ணப்பம் வழங்கலாம்.
Read More : Flipkart நிறுவனத்தில் வேலை..!! இந்த கல்வித் தகுதி இருந்தாலே போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!