fbpx

வீட்டில் செல்வ வளம் மற்றும் நேர்மறை சிந்தனை பெருக வேண்டுமா.? இந்த 5 பொருள்கள் வீட்ல வச்சுக்காதீங்க.!

புதியதாக வீடு வாங்குகிறோம் அல்லது கடை வாங்குகிறோம் என்றாலும் வீடும் கடையும் வாஸ்துப்படி அமைந்திருக்கிறதா என்பதில் நாம் கவனமாக இருப்போம். அதேபோல் தான் ஒரு வீடு கட்டுவதாக இருந்தாலும் அதனை வாஸ்துவின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். பெட்ரூம் வீட்டில் வாஸ்துபடி ராசியான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி வைப்போம். அதேநேரம் எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கக்கூடிய சில பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த நான் மறந்து விடுவோம். இந்தப் பொருட்கள் கண்திருஷ்டி மற்றும் எதிர்மறை சிந்தனைகளையும் செலவுகளையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும்.

நம் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த கூடிய 5 பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம். பழைய காலண்டர்களை வீட்டில் வைத்திருக்கவே கூடாது. இவை எதிர்மறை சிந்தனைகளை ஊக்குவிப்பதோடு துரதிஷ்டங்களையும் வீட்டில் இருக்க வைக்கும் என வாஸ்து சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. உடைந்த கடிகாரங்களையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என வாஸ்து சாஸ்திர வள்ளுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அனைத்து காரியங்களும் கால நேரத்தின் படி தான் நடக்கிறது. எனவே உடைந்த கடிகாரம் வீட்டில் இருப்பது எப்போதும் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது. எனவே உடைந்த கடிகாரத்தை உடனடியாக பழுது பார்க்க வேண்டும் இல்லை என்றால் அவற்றை அப்புறப்படுத்தி விட்டு புதிய கடிகாரங்களை மாற்ற வேண்டும்.

உடைந்த மற்றும் ஆடும் நாற்காலிகளையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்பது வாஸ்து சாஸ்திரத்தில் இருக்கிறது. இந்த உடைந்த நாற்காலிகளால் பனை இழப்பு நிதி நெருக்கடி மற்றும் எதிர்மறை எண்ணங்கள் வீட்டில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. மேலும் படுக்கைக்கு அடியில் எந்த பொருட்களையும் வைக்க கூடாது என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது பணம் மற்றும் நகையாக இருந்தாலும் சரி. படுக்கைக்கு அடியில் பொருட்களை வைத்திருப்பது மூலம் துரதிஷ்டமும் எதிர்மறை சிந்தனைகளும் அதிகரிக்கும் என தெரிவிக்கின்றனர். நமது வீட்டிலும் வீட்டிற்கு வெளியேயும் காய்ந்த மரங்கள் மற்றும் பட்டுப்போன மரங்கள் இருக்கக் கூடாது. இவை ஒரு வீட்டின் உயிர்ப்பு தன்மையை போகச் செய்துவிடும். மேலும் வீட்டில் இருப்பவர்களிடம் எதிர்மறை சிந்தனை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.

Next Post

முக்கிய அறிவிப்பு...! குரூப் 7A தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு...! எப்போது தேர்வு...?

Thu Dec 28 , 2023
குரூப் 7A தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் tnpscexams.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வாணையம் அறிவிப்பு. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் : 22/2023, நாள் 13.10.2023-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை- (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) பதவிக்கான எழுத்துத் தேர்வு […]

You May Like