அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள மோதலில் இதுவரை 71 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அர்மீனியா – அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் போர் தொடங்கியது. ஆறு வாரங்கள் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் நாக்ரோனா – கராபாக் ஆகிய மாகாண்ம கைப்பற்றப்பட்டது. இதில் சுமார் 6000த்துக்கு அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.
ரஷ்யா இந்த இருநாடுகளின் போரை 2021ன் தொடக்கத்தில் முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனால் அடிக்கடி இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை வலுத்தது. கடந்த சில நாட்களாக போர் முற்றி வருகின்றது. பாதுகாப்பு பணியில் இருந்த இரு நாட்டு வீரர்களும் தொடர்ந்து மோதலில் உள்ளனர். இதுவரை 71 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு.. பீரங்கி குண்டுகள் வீசித் தாக்குதல் தொடர்ந்து வருகின்றது. ராணுவத்தினர் உச்சகட்டமாக நடந்த தாக்குதலில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.