fbpx

கவனம்.. மின்கட்டணம் செலுத்தவில்லை என்று மெசேஜ் வருகிறதா..? அதை கிளிக் செய்தால் வங்கிக் கணக்கு காலியாகலாம்..

இந்தியாவில் சைபர் கிரைம் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 4,047 ஆன்லைன் வங்கி மோசடி வழக்குகள், 2,160 ஏடிஎம் மோசடி வழக்குகள், 1,194 கிரெடிட்/டெபிட் கார்டு மோசடி வழக்குகள் மற்றும் 1,093 OTP மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதாக என்சிஆர்பி தெரிவித்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மற்றொரு மோசடி அரங்கேறி உள்ளது..

மின்சாரக் கட்டணம் நிலுவையில் இருப்பதாகவும், கொடுக்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அதைச் செலுத்த வேண்டும் என்றும் சைபர் குற்றவாளிகள் எஸ்எம்எஸ் அனுப்புகின்றனர்.. இந்த மின்கட்டண மோசடி பல மாதங்களாக நடந்து வருகிறது, மேலும் பல பயனர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து சைபர் குற்றவாளிகள் பணத்தை திருடி வருகின்றனர்.. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இதுபோன்ற மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

இந்த மோசடி செய்பவர்கள் மக்களின் தொலைபேசிகளை ஹேக் செய்து, மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும், அதை உடனே செலுத்த வேண்டும் என்றும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அந்த செய்தியில் “ அன்புள்ள நுகர்வோரே, உங்கள் முந்தைய மாத பில் புதுப்பிக்கப்படாததால் இன்று இரவு உங்கள் மின்சாரம் நிறுத்தப்படும். பில் செலுத்த பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

பாதிக்கப்பட்டவர் SMS இல் உள்ள இணைப்பைக் கிளிக் செய்தால், மற்றொரு இணையதள பக்கம் திறக்கும்.. அவர்கள் நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்கப்படுவார்கள். மின் கட்டணம் செலுத்துவதாக எண்ணி, பலரும் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடுகின்றனர்.. இதனால் அவர்களின் கணக்கில் இருந்து சைபர்கள் குற்றவாளிகள் நேரடியாக பணம் பெறுகின்றனர்..

நாடு முழுவதும் மின் கட்டண முறைகேடு தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த மோசடி அதிகரித்துள்ளது.. இருப்பினும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் வாய்ப்பை இது நிராகரிக்கவில்லை. குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் இணைப்புகளை நீங்கள் ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Maha

Next Post

எலிசபெத் ராணி எழுதிய ரகசிய கடிதம் …63 ஆண்டுகளுக்கு பிரித்து படிக்க முடியாது….ஏன்?

Mon Sep 12 , 2022
மறைந்த ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. ஆனால் அதை 63 ஆண்டுகளுக்கு பிரிக்கமுடியாது. ஏன் பிரித்து படிக்க முடியாது என்பதுபற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளது. ராணி 2-ம் எலிசபெத் 1986ல் நவம்பரில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்றிருக்கின்றார். அப்போது சிட்னியின் மேயருக்கு ராணி தன் கையால் ஒரு கடிதம் எழுதினார். அதன் தொடக உரையிலேயே கி.பி.2085ம் ஆண்டு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நாளில் இந்த […]

You May Like