PAN 2.0: பான் 2.0 புதுப்பிப்பதற்கான போன், மெசேஜ், ஓடிபி வந்தால் அதற்கு பயனர்கள் பதிலளிக்க வேண்டாம் என்றும் இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பான் கார்டுகளை பொறுத்தவரை, ரேஷன் கார்டுகளை போல ஒவ்வொரு குடிமகனுக்கும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதேபோல, நாட்டிலுள்ள மொத்த வரி வருவாயை கணக்கிடுவதிலும் பான் அட்டைகள் பிரதான கருவியாக விளங்குகின்றன. இதுவே, ஒட்டுமொத்த வரி பங்களிப்புகளை மதிப்பிடுவதற்கும், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் பேருதவி புரிகின்றன. குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் டெபாசிட் செய்வதற்கும், பணம் எடுப்பதற்கும் பான் அட்டைகள் அவசியம்.
கடன் வாங்குவது, வங்கி கணக்கு தொடங்குவது, பங்கு வர்த்தக கணக்கு தொடங்குவது, வீட்டுக்கடன் வாங்குவது, மோட்டார் வாகனக்கடன் வாங்குவது போன்ற நிதி தொடர்பான வேலைகளில் பான் கார்டுகளின் தேவையும் அவசியமாகின்றன. மொத்தத்தில், அனைத்து வரி பரிவர்த்தனைகள், வருமானத்தின் மீதான வருமானம், TDS/TCS கிரெடிட்கள், கடித பரிமாற்றங்கள், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை இணைக்க பான் கார்டுகளே உதவுகின்றன. அதனால்தான், பல்வேறு மோசடிகளை தவிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் பான் கார்டை, பண பரிமாற்றங்களுக்கு கட்டாயமாக்கியிருக்கிறது மத்திய அரசு.
இந்நிலையில், பான் 2.0 என்ற அதிநவீன வசதி கொண்ட பான் அட்டை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்த பான் 2.0 அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறது.. நவீன வசதிகளுடன் கூடிய இந்த பான் 2.0 அட்டைகளை எப்படி பெறுவது? இந்த 2.0 அட்டையின் ஸ்பெஷாலிட்டி என்னென்ன? புதிய பான் கார்டு வாங்கினால், பழைய பான் கார்டு செல்லுபடியாகாதா? என்பது குறித்தும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பான் அட்டையில் கியூஆர் கோடு இடம்பெற்றிருக்கும்.. தற்போது நடைமுறையிலுள்ள பான் கார்டுகளில், எண் மற்றும் எழுத்தில் 10 இலக்க அடையாள குறியீடு உள்ளது. இதனை கியூஆர் கோடாக மாற்றுவதன் மூலம், வரி செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் சேவை மேம்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிகிறது. அதுமட்டுமல்ல, இதில், பாதுகாப்பு, செலவினம் குறைப்பு போன்ற வசதிகள் உள்ளதாகவும் மத்திய அரசு கூறுகிறது.
இந்தநிலையில், புதுபிக்கப்பட்ட புதிய பான் கார்டை உங்கள் முகவரிக்கு அரசு நேரடியாக அனுப்பும். கவனமாக இருங்கள். பான் கார்டு புதுப்பிப்புக்காக வரும் போன், மெசேஜ், மெயில் எதற்கும் பதிலளிக்கவேண்டாம். எந்த தகவலும் அல்லது ஓடிபியும் கொடுக்கவேண்டாம். எச்சரிக்கையாக இருந்து இணைய மோசடிகளை தவிர்க்க மத்திய அரசு வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளன.
Readmore: ஷாக்!. மசாஜ் செய்துகொண்ட பாடகி பலி!. தாய்லாந்தில் சோகம்!. மருத்துவர்கள் எச்சரிக்கை!