fbpx

கோடையில் ஆண்களுக்கான எச்சரிக்கை!… சுட்டெரிக்கும் வெயிலால் விந்தணு குறையும் அபாயம்!…

கோடை வெயிலில் சுத்தினால் விந்தணு தரம் குறையும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடையின் வெப்பத்தை பற்றியும், அதன் மூலம் உயிரணுக்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றியும் ஆண்களுக்கு சரியான புரிதல் இல்லை. இப்போது கோடை காலங்களில் அதிக நேரம் வெளியே வெயிலில் அலைபவர்களுக்கு குறைவான விந்தணுக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு அப்படியே எதிர்மாறாக வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கும் அலுவலகத்தில் சென்று வேலை செய்பவர்களுக்கு ஆரோக்கியமான உயிரணுக்கள் இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஆண்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவு ஆகியவற்றை உற்கொள்ள வேண்டும். மேலும் முடிந்த அளவு நீண்ட நேரம் வெயிலில் அலைவதை குறைத்துக் கொள்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால் வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள குடை மற்றும் உடலுக்கு குளிர்ச்சியும் சக்தியும் அளிப்பதற்காக தண்ணீர் பாட்டில் மற்றும் குளுக்கோஸ் பவுடர் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்.

இதைத் தவிர ஆண்களின் உடலில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேறு சில உபாயங்களையும் நாம் மேற்கொள்ளலாம். உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆண்கள் நல்ல காற்றோட்டமுள்ள பாக்ஸர் ஷார்ட்ஸ்களை அணியலாம். மிகவும் இறுக்கமான உள்ளாடைகளுக்கு பதிலாக இவ்வாறு பாக்சர்களை அணிவது மிகவும் நல்லது. இதைத் தவிர மது அருந்துதல், புகைப்பிடிப்பது, போதைப்பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதும் உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். மேலும் உணவு கட்டுப்பாட்டிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

Kokila

Next Post

கோடைக்காலத்தில் தேங்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?... அறிந்து ஆரோக்கியமாக வாழ்வோம்!

Mon Apr 17 , 2023
கோடை காலத்தில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். கோடை காலத்தில் தேங்காய் சாப்பிடுவது செரிமானம் சரியாகும், எலும்புகளும் வலுவாக இருக்கும். அதே நேரத்தில், இதய நோய்களைக் குணப்படுத்தவும் தேங்காய் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. தேங்காய் எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய சத்து நிறைந்த. ஆனால் கோடையில் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும். வெயில் காலத்தில், தேங்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு […]

You May Like